செவ்வாய், 9 டிசம்பர், 2008

கண்கள் வெறும் கருவிகள் தானே

சுடிதார் மேல்புறம்
காற்றில் பட படக்க
இமை சிறகு
அக்கம் பக்கம் அடித்து
திறப்பில் பறக்கும் கண்கள்

கோளங்கள் தரை
குனிந்து கோலமிட
கதப்புகளில்
குத்து ஈட்டியாய்
நிலை குத்தும் கண்கள்

மேக சேலை மறைப்பில்
அமிழ்தூட்டும் சிகரங்களை
சன்னமாக கன்னமிட்டு
மின்னலாய் நோட்டமிடும் கண்கள்

காணாமல் போன
களவானி பயல்களை
தேடி தேடி கண்டு
அலையும்
காவல்காரனாய் கண்கள்

இறந்த சடலத்திலும்
கலைந்த ஆடையில்
திறந்த கலசங்கள்
மொய்க்கும் ஈக்களாய்
விவஸ்தை கெட்ட கண்கள்

விவஸ்தை கெட்டவை
கண்களா
சாத்தானா
மறுக்கப்பட்ட கனியா
உணட ஏவாளா
ஆடை கண்ட ஆறாம்அறிவா

கண்கள்
வெறும் கருவிகள் தானே